November 14, 2008

முன் முடிவுகலற்று இருப்போம் (Conditioned Mind)

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் நம்முடைய முந்தைய அனுபவத்தை கொண்டே உணர்கிறோம். அதனால் அந்த நொடி எதுவாக இருக்கிறதோ அதை நாம் உணர்வதில்லை.

உதரணமாக ஹோட்டல் , பேனா, திருமணம் , லட்டு , தந்தி என எந்த ஒரு விஷயம் யோசித்தாலும் நம் நினைவலைகளில் நம் ஏற்கனவே உணர்ந்ததை ஒரு தடவை மறு ஒலிபரப்பு செய்கிறோம் இல்லையா?

சில நிமிடங்கள் எடுத்து கொண்டு உணர்ந்து பாருங்கள்.

எந்த ஒரு விஷயம் பற்றியும் நமக்கு ஒரு முன் முடிவு இருக்கவே செய்கிறது.

இந்த உயிரற்ற பொருள்களின் முன் முடிவுகள் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிப்பதில்லை. ஆனால்......

நம்முடைய வாழ்க்கையின் சக மனிதர்களைப்பற்றிய முன் முடிவுகள் நம் வாழ்வை பெரிதும் பாதிக்கின்றன.

நாம் சிறு வயதில் சண்டை போட்ட மனிதர் இப்பொழுது எதிரே வந்தாலும் சில வருடங்கள் கழித்தும் நாம் அவருடன் பேசவே தயங்குகிறோம். ஆனால் இந்த சில வருடங்களில் அவர் எவ்வளவு மாறி இருக்கலாம் என்பதை நாம் உணர்வதே இல்லை. நம் குழந்தைகள் , மனைவி அல்லது கணவர், எதிர்வீட்டுகாரர், பிரிந்து போன தொழில் பங்குதாரர் , நண்பர்கள், அலுவலக சகாக்கள் மற்றும் நாம் சந்திக்கும் அனைவரை பற்றியும் நமது முன் முடிவுகள் நாம் அவர்கள் எப்படி யாராக இந்த நொடியில் இருக்கிறார்களோ அதை உணர அனுமதிப்பதில்லை.

வாழ்க்கையின் சலிப்பிற்கு மிக முக்கிய கரணம் இந்த முன் முடிவுகள்தான். ஒரு புதிய இடத்திற்கு நாம் செல்லும்பொழுது நாம் மனதில் முடிவுகள் அற்று இருக்கிறோம் ஒரு குழந்தையை போல . ஆனால் பார்த்த இடத்திற்கு செல்லும் பொழுது ஏற்கனவே சந்தித்த அனுபவங்களே நம்மை சலிப்படைய வைக்கிறது ஒரு கிழவரை போல.

ஒவ்வெரு நாளையும் நாம் முன் முடிவுகளோடு சந்தித்தால் சலிப்புதான். இன்றுதான் நாம் வாழ்க்கையின் முதல் நாள் என்றால் ஒவ்வெரு நொடியும் புதியது அல்லவா.

மன்னர் ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்து விடுகிறார் . ஆனால் அவனோ சிரித்தவாறே வருகிறான் மன்னருக்கு ஒரே ஆச்சிரியம்.
" ஏனப்பா? நானோ உனக்கு மரண தண்டனை கொடுத்துள்ளேன் ஆனால் நீ சிரித்துக்கொண்டே வருகிறாய் என்ன விஷயம் "

"மன்னா எனக்கு குதிரையை பறக்க வைக்க தெரியும் ஆனால் நீங்கள் எனக்கு மரண தண்டனை கொடுத்ததால் அந்த சக்தி வீனாகப்போகிறதே என வருத்தபடுகிறேன் "

" என்ன... குதிரையை பறக்க வைப்பாயா? உடனே எனக்கு அதை காண்பி "

"கண்டிப்பாக என்னால் உங்கள் குதிரையை பறக்க வைக்க முடியும் ஆனால் ஒரு நிபந்தனை குதிரையை பழக்குவதற்கு எனக்கு ஒரு வருடம் அவகாசம் வேண்டும்."

மன்னரும் குதிரையைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்.

வீட்டில் நுழைந்ததும் அவன் மனைவி " உங்களுகென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது குதிரை எங்காவது பறக்குமா இப்படிப்போய் மன்னரிடம் சொல்லி இருக்கிறீர்களே "

" அடிப் போடி... ஒரு வருடத்தில் இயற்கையாக நான் இறந்து போகலாம் , மன்னர் இறந்து போகலாம் அல்லது குதிரையே கூட பறக்கலாம் யார் கண்டது "

வாழ்க்கை நடப்பது நம் மனதில் தானே முன் முடிவுகலற்று இருந்து பாருங்கள்..

3 comments:

கவிதா | Kavitha said...

//ஒவ்வெரு நாளையும் நாம் முன் முடிவுகளோடு சந்தித்தால் சலிப்புதான். இன்றுதான் நாம் வாழ்க்கையின் முதல் நாள் என்றால் ஒவ்வெரு நொடியும் புதியது அல்லவா.
//

எனக்கு இப்படித்தான் நடக்கும், இதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து போகிறது. இண்டியூஷன்; னா அல்லது பிரடிக்ஷனா தெரியாது.. ஆனால் ..நான் அப்படி நினைத்த பல விஷயங்கள் 90% சரியாக நடந்து இருக்கின்றன.. ஒரு ஆசிரமம் அமைத்து சாமியாராக உட்கார்ந்து விட எனக்கு தகுதிவந்து விட்டதாக கூட நான் நினைத்துக்கொள்வதுண்டு.
:)))
நீங்கள் சொல்லுவது போன்று முன் முடுவுகளுடன் இருப்பதால் சலிப்பு கண்டிப்பாக ஏற்படத்தான் செய்கிறது... :))

பழமைபேசி said...

சிந்திக்க வைக்குற பதிவு! முன் முடிவுகளால் நான் ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏராளம். வரும்போது என்ன சூழலோ, அங்கேயே மனம் தங்க, திரும்பிப் போகும் போது அங்கு இருப்பது வேறு சூழல். :-o)

Raju said...

\\முன் முடிவுகலற்று இருந்து பாருங்கள்..\\

நல்லாருக்கே இந்த மேட்டரு..!